சுவிட்சர்லாந்தில் மலிவான விலையில் கிடைக்கும் விமான டிக்கெட்டுகள்? எதிர்வரும் கோடை விடுமுறை நாட்களில் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான பயணச்சீட்டுகளின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்காக விமானப்பயணச்சீட்டும் இவ் விலைக்குறைவை சந்திக்கலாம் என எதிர்பு கூறப்பட்டுள்ளது.
கோவிட், அதிக எரிசக்தி செலவுகள் மற்றும் பணவீக்கம் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் சுவிட்சர்லாந்திற்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமான டிக்கெட்டுகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
ஆனால் இந்த விலை அதிகரிக்கும் போக்கு இப்போது முடிவுக்கு வரலாம் எனவும் இந்த ஆண்டு மே முதல் செப்டம்பர் வரைஇ சுவிட்சர்லாந்தின் விமான நிலையங்களில் இருந்து விமானப் பயணத்தின் விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல விமானக் கட்டணங்களின் விலை கோடை விடுமுறையின் போது குறையும். ஆனால் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் மற்றும் எவ்வளவு தூரம் முன்கூட்டியே உங்கள் டிக்கெட்டுகளை வாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து விலைகளில் மாற்றம் ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.