சுவிட்சர்லாந்தில் நீர் மற்றும் ரயில் போக்குவரத்து ஊடாக சரக்குகளை இடம் நகர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையில் ரயில்கள் மற்றும் படகுகளை பயன்படுத்தி சரக்கு போக்குவரத்து மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக கூடுதல் நிதியீட்டம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்வாறு ரயில் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து ஊடாக சரக்குகளை போக்குவரத்து செய்வதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் எனவும் கார்பன் வெளியீட்டை வரையறுக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.