சுவிட்சர்லாந்தில் சிறார்களுக்கு பாலின மாற்ற அறுவைச்சிகிச்சை தடைவேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரை
சூரிச்சில், சுவிஸ் பீப்பிள்ஸ் பார்ட்டியைச் சேர்ந்த மாநில ஆளுநர் (State Councillor) நடாலி ரிக்லி, 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு பாலின மாற்ற அறுவைச்சிகிச்சையை நாடு முழுவதும் தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்.
திங்கள் அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “இத்தகைய மாற்றங்கள் சிறுவர்களின் உடல் மற்றும் மன நலத்திற்கு நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அவர்களை பாதுகாப்பதற்காக இந்த அறுவைச்சிகிச்சை 18 வயதிற்குப் பிறகே அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
இந்தக் கோரிக்கையை ஆதரித்து, தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நினா ஃபெர் டூசெல், எதிர்வரும் செப்டம்பரில் நடக்கும் நாடாளுமன்ற அமர்வில் ஒரு தீர்மானத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு மையவலதுசாரி கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளைஞர்களில் இயற்கையாக ஏற்படும் பாலுணர்வு குழப்பங்களுக்கு நிரந்தர அறுவை சிகிச்சைகள் சரியான பதிலாக இருக்க முடியாது என விமர்சகர்கள் கூறுகிறார்கள். தற்போது, இத்தகைய சிகிச்சைகளுக்கான முடிவுகள் மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் 30 சிறார்கள்தான் இந்த சிகிச்சைகளுக்கு செல்லுகிறார்கள். பெரும்பாலும் இது மார்பு அகற்றும் சிகிச்சையாக இருக்கிறது; பாலுறுப்பு மாற்ற அறுவைசிகிச்சை சுவிட்சர்லாந்தில் இன்னும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்த விவாதம் தற்போது நார்டிக் நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட புதிய சட்டங்களுடனும் ஒத்துப்போகிறது, அங்கு சிறுவர்களுக்கான பாலின மாற்ற சிகிச்சைகள் குறித்த கட்டுப்பாடுகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
@WRS