வாலேஸ் தீ விபத்து விசாரணை – சொத்துகள் பறிமுதல் கோரிக்கை பிரான்ஸில் நிராகரம்
சுவிட்சர்லாந்தின் Valais கன்டோனில் இடம்பெற்ற தீ விபத்து தொடர்பான விசாரணையின் பின்னணியில், குற்றச்சாட்டுக்குள்ளான தம்பதியரின் சொத்துகளை பறிமுதல் செய்ய சுவிஸ் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கையை பிரான்ஸ் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பிரான்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, Jacques Moretti மற்றும் அவரது மனைவி Jessica Moretti ஆகியோரின் சொத்துகள் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றதாக கூறப்படும் எந்த குற்றச்செயலுடனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், Cannes மற்றும் Corsica பகுதியில் உள்ள நிலசொத்துகள் முக்கியமாகப் பார்க்கப்பட்டன.
கடந்த ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில், இந்த தம்பதியருக்கு சொந்தமான கான்ஸ் மற்றும் Sari-Solenzara பகுதிகளில் உள்ள வீடுகள், வங்கி கணக்குகள் மற்றும் உயிர்காப்பீட்டு பாலிசி ஆகியவற்றை பறிமுதல் செய்ய சுவிஸ் அதிகாரிகள் கோரிக்கை வைத்திருந்தனர் என்று Agence France-Presse தகவல் வெளியிட்டது. ஆனால் அந்த கோரிக்கை தற்போது பிரான்ஸ் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வாலேஸ் கன்டோனின் பொது வழக்கறிஞர் அலுவலகம் இந்த முடிவை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த தம்பதியர் Crans-Montana பகுதியில் உள்ள “Le Constellation” என்ற பார் நிறுவனத்தின் இணை உரிமையாளர்களாக உள்ளனர். இந்த இடத்தில் புத்தாண்டு இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 115 பேர் காயமடைந்தனர்; இதில் சிலரின் நிலை மிக கவலைக்கிடமாக இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, Nicolas Féraud என்ற மேயரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதேவேளை, அந்த பாரில் 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த தீ பாதுகாப்பு பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விதிமுறைகளின்படி ஆண்டுதோறும் இத்தகைய பரிசோதனைகள் கட்டாயமாக நடைபெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீ விபத்தின் காரணம், பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவை குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.