சுவிஸ் அரசாங்கம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும்இ பல்லுயிர் பெருக்கத்தை வலுப்படுத்தவும் மற்றும் இயற்கை அபாயங்களிலிருந்து பாதுகாக்கவும் 2028 ஆம் ஆண்டுக்குள் 2.207 பில்லியன் சுவிஸ் பிராங்க்குகள் முதலீடு செய்ய விரும்புவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை பெடரல் கவுன்சில் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த கடன்கள் குறித்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளப் பாதுகாப்புக்காக 481 மில்லியன் சுவிஸ்பிராங்குகள், காடுகளுக்கு 451 மில்லியன் சுவிஸ் பிராங்குகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 450 மில்லியன் சுவிஸ்பிராங்குகள் மற்றும் இயற்கை மற்றும் நிலப்பரப்புக்கு 384 மில்லியன் சுவிஸ்பிராங்குகள் ஆகியவற்றை அனுமதிக்க பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கான ஃபெடரல் அலுவலகம் இது பற்றி குறிப்பிடுகையில், மத்திய அரசு நான்கு ஆண்டுகளாக இவ்வாறான திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து பல்வேறு சுற்றுச்சூழல் பகுதிகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.