சுவிட்சர்லாந்தில் தன்னியக்க வாகன சேவை அறிமுகம்
சுவிட்சர்லாந்தின் சென்ட்கேலன் மாவட்டத்தில், ஆல்ட்ஸட்டனைச் சுற்றி புதிய தன்னியக்க பொதுப் போக்குவரத்து சேவையை போஸ்ட்பஸ் டிசம்பரில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தவுள்ளது. அக்டோபரில் சோதனை ஓட்டங்கள் அறிவிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமை AmiGo எனப்படும் வாகனம் மக்கள் முன் புழக்கத்திற்கு வந்துள்ளது.
சீன தொழில்நுட்ப நிறுவனம் பைடுவின் ரோபோடாக்ஸியுடன் இணைந்து உருவாக்கப்பட்ட AmiGo, கிராமப்புற பகுதிகளில் பொதுப் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தேவைக்கேற்ப செயலி மூலம் சேவையை பயன்படுத்த முடியும்.

36 சென்சார்கள், பல காமராக்கள், ரேடார் மற்றும் துல்லியமான நிலைப்படுத்தல் அமைப்புடன், அதிகபட்சம் நான்கு பயணிகள் பயணிக்க வாய்ப்பு உள்ளது. முதல் சோதனை ஓட்டங்கள் ஆல்ட்ஸட்டனைச் சுற்றி நடைபெறும், பின்னர் சேவை விரிவாக வழங்கப்படும்.
சாதனை வெற்றி பெறும் பட்சத்தில், துணையில்லாத பயணங்கள் 2026-ல், நிரந்தர சேவை 2027 முதல் காலாண்டில் தொடங்கும். இது கிராமப்புற மக்களுக்கு நவீன பொதுப் போக்குவரத்தை அணுகும் வாய்ப்பாகும்.
© SwissInfo