சென்ட்கேலனில் வீடு புகுந்து கொள்ளை முயற்சி : பெண்களின் துணிகர செயல்.!
கடந்த வியாழக்கிழமை (18.09.2025) காலை 10 மணிக்கு சில நிமிடங்கள் கழித்து, சென்ட்கேலன் மாநிலத்தின் அவசர அழைப்பு மற்றும் நடவடிக்கை மையத்திற்கு ஒரு வெளிநாட்டு நபர் புகார் அளித்தார்.. அந்த தகவலின் படி, இரு பெண்கள் கிரோபல்ட் ஸ்ட்ரெஸ்ஸே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து, அங்கு உள்ள பொருட்களைத் தேடிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த கன்டோன் போலீசார், சந்தேகத்திற்குட்பட்ட இரு பெண்களையும் அங்கு கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 32 வயதான ஒரு நெதர்லாந்து நாட்டுப் பெண்ணும், 30 வயதான ஒரு இத்தாலிய பெண்ணுமாவர்.

இந்த இருவருக்கும் எதிராக தற்போது சென்ட்கேலன் மாநில வழக்கறிஞர் அலுவலகத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர்களின் குடியுரிமை நிலை தொடர்பாக மாநில குடியேற்றத் துறை (Migrationsamt) கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதை ஆய்வு செய்து வருகிறது.
ஸ்விட்சர்லாந்தில் வீடு புகுந்து திருடுதல் போன்ற குற்றங்கள் கடுமையாகப் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் இத்தகைய குற்றச்செயலில் சிக்கும்போது, அவர்கள் எதிர்கொள்ளும் சட்ட மற்றும் குடியேற்ற நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும். இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை, குடிமக்கள் சந்தேகமான நிகழ்வுகளை உடனடியாக போலீசுக்கு அறிவிப்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுகிறது.
© Kapo SG