சூரிச்சில் பொலிஸார் மீது தாக்குதல் ! சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சூரிச் மற்றும் பாசல் கால்பந்தாட்ட கழகங்களுக்கு இடையிலான போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சூரிச்சில் பொலிஸார் மீது தாக்குதல்
கால்பந்தாட்ட ரசிகர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்கள், பட்டாசு மற்றும் போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு கழகங்களதும் ரசிகர்கள் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மோதலைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் புகைக் குண்டு பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பனவற்றை மேற்கொண்டுள்ளனர்.