சுவிட்சர்லாந்தில் சிரங்கு, அரிப்புகளால் தோலில் ஏற்படும் தொற்றுஇ சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சுவிஸ் மருத்துவமனைகள் அதிக நோயாளிகளைப் பதிவுசெய்து சிகிச்சை அளித்து வருவதாக தெரிகிறது.
எனினும் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை.
ஏனென்றால், சிரங்கு என்பது ஒரு அறிக்கையிடக்கூடிய நோய் அல்ல, எனவே அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என சொல்லப்படுகிறது.
சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையின் தலைமை தோல் மருத்துவரான கிறிஸ்டியன் கிரேஸின் கூற்றுப்படி, சிரங்கு வழக்குகள் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன
‘அதிகமாக பயணம் செய்வதாலும் ஹோட்டல்களில் தங்குவதாலும் இவ்வாறான தொற்றுக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கிறார்.
‘சிரங்கு நோய்த்தொற்று ஆபத்தானது அல்ல, ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் பொதுவாக தோலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடுமையான அரிப்பு மற்றும் எரிவு ஏற்பட்டு தோலழற்சியால் பாதிக்கப்படுகின்றனர்,’ என்று அவர் மேலும் கூறினார்.