திங்கள்கிழமை பிற்பகல் Altstätten SG இல் ஓடும் கார் தீப்பிடித்தது. டிரைவர் சரியான நேரத்தில் நிறுத்தியதால் காயம் ஏற்படவில்லை.
32 வயதுடைய நபர் ஒருவர் தனது காரை 2:35 மணியளவில் ட்ரோஜனை (Trogen) நோக்கி ஓட்டிச் சென்றார். மலைப்பாதையில், “தனது காரில் செயல்திறன் குறைவதை” கவனித்ததாக, St.Gallen காவல்துறையினரிடம் அவர் தெரிவித்தார்.
ஓட்டுநர் தனது காரில் மாற்றங்களை அவதானித்த ஓட்டுனர் காரை நிறுத்தாமல் தொடர்ச்சியாக செலுத்திக்கொண்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில், பின்புறக் கண்ணாடியில் புகை மற்றும் தீப்பொறிகளைக் கண்டார். இதனால் அவர் தனது காரை சாலையின் இடது பக்கம் நிறுத்தினார். சிறிது நேரத்தில் வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

வாகனத்திதில் இருந்து பெற்றோல் கசிந்ததால் கார் எரியத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சுமார் 9500 பிராங்குகள் அளவுக்கு சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது. அணைக்கும் பணியின் காரணமாக, ட்ரோஜெனெர்ஸ்ட்ராஸ்ஸை (Trogen) சுமார் ஒரு மணிநேரம் மூட வேண்டியிருந்தது என கன்டோனல் போலீசார் தெரிவித்தனர்.