வோட் கன்டோனில் விவசாயி மீது காளை தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தின் Palézieux-Village பகுதியில் இன்று காலை நடந்த விபத்தில், ஒரு விவசாய தொழிலாளி காளை தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.
காலை சுமார் 8 மணியளவில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு விவசாயப் பண்ணையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 45 வயதுடைய போலந்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், காளை இருந்த வெளிப்புற வேலிப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென காளை அவரை தாக்கியுள்ளது.
அந்த காளை அவரை வேலிக்கு எதிராக பலத்த அழுத்தத்துடன் தள்ளியதுடன், பின்னர் மிதித்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் அவரை உயிர்ப்பிக்க முயன்றபோதிலும், அவர் அங்கதே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அரசு வழக்கறிஞர் அலுவலகம் குற்றவியல் விசாரணையை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளது. விசாரணையை ஜெண்டார்மரி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்திற்குப் பின்னர், அந்த காளை அதன் உரிமையாளரால் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.