சுவிஸில் ஆள் பாதி ஆடை பாதியாக திரியும் தமிழ் பெண்களே எச்சரிக்கை.!! பொது இடத்தில் பெண்ணின் சட்டைக்குள் கமராவை விட்ட முதியவர் : பின்னர் நடந்த பகீர் சம்பவம்.!!
பெர்லினில் சுற்றுலாப் பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்த முதியவர்: தைரியமான இளைஞர்களின் உதவியால் பிடிபட்ட கொடூரம் – வெளிநாட்டுப் பயணத்தில் பெண்களுக்கான எச்சரிக்கை.!!
சுவிட்சர்லாந்தில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் தமிழர்கள் அதிகரித்து வரும் இன்றைய காலத்தில், இன்றைய குற்றமும் பின்னணியும் எபிசோட் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை சுமந்து வருகிறது. ஜெர்மனியின் தலைநகரம் பெர்லினின் கிரெய்ட்ஸ்பெர்க் பகுதியில் விடுமுறை கொண்டாட சென்றிருந்த ஸ்விட்சர்லாந்தின் பாசல் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை அறியாமல் ஒரு முதியவர் தனது ஸ்கர்ட்டுக்குள் ரகசியமாக வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இது போன்ற ‘அப்ஸ்கர்ட்டிங்’ என்றழைக்கப்படும் ரகசிய படப்பிடிப்பு குற்றங்கள், ஐரோப்பாவில் பெருகி வரும் ஆபத்தான போக்காக மாறியுள்ளன. குறிப்பாக, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும் தமிழ்ப் பெண்கள் இதுபோன்ற அனுபவங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதால், இந்தச் செய்தி அவர்களுக்கு மிகுந்த பயனுள்ள எச்சரிக்கையாக அமையும்.
சரி இப்ப விசயத்துக்கு வருவோம். பாசல் கன்டோனைச்சேர்ந்த அந்த இந்த இளம்பெண் தனது நண்பியுடன் ஷாப்பிங் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தபோது, குறைந்தது அரை மணி நேரத்திற்கு மேலாக ஒரு முதியவர் தங்களைத் தொடர்ந்து வந்ததை அறியவே இல்லை. அவர் தனது பையில் மறைத்து வைத்திருந்த கேமராவால், குறிப்பாக அந்தப் பெண்ணின் ஸ்கர்ட்டுக்குள் ZOOM செய்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக, அருகிலுள்ள ஒரு கஃபேயில் அமர்ந்திருந்த இரு இளைஞர்கள் இந்த சந்தேகத்துக்குரிய நடத்தையை கவனித்தனர். கேமராவின் ஒளிவிளக்கைப் பார்த்து உறுதியான அவர்கள், உடனடியாக ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார், மற்றொருவர் அந்த முதியவரைப் பின்தொடர்ந்து கண்காணித்தார். இல்லையெனில், இந்தப் பெண் எதுவுமே அறியாமல் அப்படியே சென்றிருப்பார். நாளை அந்த காணொளி ஏதோ ஒரு இணையத்தளத்தில் வெளியாக நெட்டில் வைரலாகியிருக்கும்.

காவல்துறை வந்து விசாரித்தபோது, அந்த முதியவர் “அந்தப் பெண்ணின் உடல் அழகாக இருந்தது” அதனால்தான் வீடியோ எடுத்து ரசித்தேன் என என்று வெட்கமின்றி கூறினார். ஆனால், அவர் ஆனால் வீடியோவை அழித்துவிட்டதாக கூறியதால், கேமராவை பறிமுதல் செய்ய முடியவில்லை. இது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. “என்னை அறியாமல் படமெடுத்து, அதை ஆன்லைனில் பதிவேற்றலாம் என்ற எண்ணமே மிகக் கொடுமையானது” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இதேபோல் ஸ்விட்சர்லாந்தின் சூரிச்சிலும் அவருக்கு ஒரு முறை இது போன்ற அனுபவம் ஏற்பட்டதாகக் கூறினார். “நான் லேசான உடைகள் அணிவது என் உரிமை, ஆனால் அது யாருக்கும் ரகசியமாக படமெடுக்க அழைப்பு இல்லை” என்று தெளிவாகக் கூறி, பல பெண்களுக்கு உத்வேகமளித்தார்.
இந்தப் பெண் அந்த முதியவரை புகார் செய்து குற்றம்சாட்டினார். மேலும், தங்களைக் காப்பாற்றிய இரு இளைஞர்களின் தைரியத்தைப் பாராட்டி, ஜெர்மனியின் பிரபல குற்ற நிகழ்ச்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர்களை பாராட்டினார்.. ஜெர்மனியில் 2020 முதல் அப்ஸ்கர்ட்டிங் என்கின்ற இவ்வாறான செயல்பாடுகள் குற்றமாக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது. இங்கிலாந்தில் 2019 முதலும், பிரான்ஸில் அதே காலகட்டத்திலும் இதுபோன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஸ்விட்சர்லாந்திலும் தனியுரிமை சட்டங்களின் கீழ் இது தண்டனைக்குரியது. தற்பொழுது அதாவது 2026 ம் ஆண்டில் ஒருவரை பின்தொடர்ந்து ரகசியமாக சென்றால் குற்றம் என் சுவிட்சர்லாந்தில் புதிய சட்டம் அமுலாக்கப்பட்டிருப்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
ஐரோப்பாவில் இது போன்ற சம்பவங்கள் அரிதல்ல. பொது போக்குவரத்து, ஷாப்பிங் மால்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற இடங்களில் இது அதிகம் நடக்கிறது. ஸ்மார்ட்போன் கேமராக்களால் இது எளிதாகிவிட்டது. சுவிட்சர்லாந்தில் இருந்து ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு செல்லும் தமிழர்கள், குறிப்பாக பெண்கள், இதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்ளக்கூடும். பல தமிழ்க் குடும்பங்கள் ஐரோப்பிய சுற்றுலாவை விரும்புகின்றனர் – பாரிஸ், பெர்லின், லண்டன் போன்ற இடங்கள் பிரபலம். ஆனால், இது போன்ற ரகசிய குற்றங்கள் பெண்களின் தனியுரிமையை பறிக்கின்றன.
வெளிநாட்டுப் பயணத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய எச்சரிக்கைகளையும் நாம் குறிப்பிட்டாகவேண்டும்.: கூட்டமான இடங்களில் எப்போதும் சுற்றுச்சூழலை கவனியுங்கள். யாராவது அசாதாரணமாக தொடர்ந்து வருவதாகத் தோன்றினால், உடனே அருகிலுள்ளவர்களிடம் கூறுங்கள் அல்லது காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள். லேசான உடைகள் அணிவது உங்கள் உரிமை, ஆனால் சந்தேகத்துக்குரிய நபர்களை தவிர்க்க முயலுங்கள். பையில் அல்லது காலணியில் மறைத்த கேமராக்களை கவனியுங்கள். நண்பர்களுடன் செல்வது சிறந்தது. சந்தேகத்துக்குரிய நடத்தையை கண்டால், தயங்காமல் உதவி கேளுங்கள்.. இந்தச் சம்பவத்தில் நடந்தது போல், பலரும் உதவ முன்வருவார்கள்.
இது போன்ற சம்பவங்கள் நமக்கு ஒரு பாடம்: பொது இடங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது, மற்றவர்களுக்கு உதவ தயாராக இருப்பது சமூகத்தை பாதுகாக்கும். சுவிட்சர்லாந்தில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் தமிழர்கள், குறிப்பாக இளம்பெண்கள், இந்த எச்சரிக்கையை மனதில் கொண்டு பயணம் செய்யுங்கள். பாதுகாப்பான சுற்றுலா அனைவருக்கும் உரிமை – அதை யாரும் பறிக்க அனுமதிக்காதீர்கள். அதே நேரத்தில் தமிழர்களாகிய நீங்கள் உங்கள் ஆடைகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உங்கள் ஆடை சுதந்திரத்தில் தலையிடுவதற்கு எமக்கு உரிமை இல்லை இருந்தாலும் ஒரு விடயத்தை சொல்லி முடிக்கிறோம்.
உலகத்தில் விலைமதிப்பான பொருட்கள் எல்லாமே மறைந்துதான் இருக்கின்றன.. இதுதான் நியதி.. அது தங்கமாக இருந்தாலும் சரி நவரத்தினங்களாக இருந்தாலும் சரி.. அதெல்லாம் மண்ணுக்குள் புதைந்து மறைந்து இருக்கும் வரைதான் மதிபபு;… அப்படித்தான் உங்கள் உடலும்…. மறைக்கவேண்டியவற்றை மறைந்தால்தான் அதன் மதிப்பு அதிகம் என்பதை மறவாதீர்கள்… உங்களை நீங்களே மலிவானவர்களாக மாற்றாதீர்கள்.. மீண்டும் ஒரு நல்ல தகவலோடு சந்திப்போம்..