சூரிச்சில் ராட்வெய்லர் (Rottweilers) நாய்கள் மீதான தடை பிறகு சோதனை நடைமுறை
2025 ஜனவரி 1 முதல், சூரிச் மாநிலத்தில் புதிய ராட்வெய்லர் நாய்கள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, சில ராட்வெய்லர்கள் குழந்தைகளை கடித்து கடுமையான காயங்கள் ஏற்படுத்தியதையடுத்து எடுக்கப்பட்டது.
தற்போது, சூரிச்சில் பதிவு செய்யப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ராட்வெய்லர்களில், 24 நாய்கள் மட்டும் இதுவரை மருத்துவ நிபுணர்களால் சோதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு நாயில் தாக்கும் தன்மை (அட்டாக் நடத்தை) இருந்ததால், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆனால், இதற்கான தீர்வு நாயைக் கொல்வதல்ல என்று சூரிச் மாநில விலங்கு மருத்துவர் லுக்காஸ் பெர்லர் தெரிவித்துள்ளார். இது கடைசி நிலையான முடிவாகவே இருக்கலாம். அதற்குப் பதிலாக, இந்த நாய்களுக்கு கட்டாய பயிற்சி வகுப்புகள், தடுப்புக் கயிறு, மற்றும் முககவசம் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இந்த சோதனைகள், சூரிச்சில் ராட்வெய்லர் நாய்களை சட்டப்படி வைத்திருக்க முடியுமா இல்லையா என்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தத் தடையின் காரணமாக, சூரிசில் உள்ள ராட்வெய்லர் நாய்களின் எண்ணிக்கை ஏற்கனவே 15 சதவீதம் குறைந்துள்ளதை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.