ஆர்காவ் – ஓஃப்ட்ரிங்கனில் ATM வெடிகுண்டு வைத்து தகர்ப்பு : குற்றவாளிகள் தலைமறைவு
ஆர்காவ் கண்டோனின் ஓஃப்ட்ரிங்கன் (Oftringen) பகுதியில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28, 2025) அதிகாலை 3 மணியளவில் ATM ஒன்றை இருவர் வெடிகுண்டு வைத்து சிதைத்தனர். சம்பவத்தை அருகில் இருந்த மக்கள் கவனித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
செய்தி கிடைத்ததும், கண்டோன் காவல்துறையுடன் அருகிலுள்ள பகுதிகளின் பிராந்திய காவல்துறையும் இணைந்து பெருமளவிலான தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால், குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை.

முதலில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ATM இயந்திரம் வெடிப்புச் சம்பவத்தால் கடுமையாக சேதமடைந்தது என்பதை உறுதிப்படுத்தினர். இயந்திரத்திலிருந்து எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை இதுவரை அதிகாரிகள் வெளிப்படுத்தவில்லை.
வெடிப்பு காரணமாக ATM மட்டும் அல்லாமல், அதற்கு பின்னால் இருந்த கட்டிடத்துக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
@Kapo AG