Gossau அருகே A1 நெடுஞ்சாலையில் ஒரே நாளில் அதே இடத்தில் மூன்று விபத்துக்கள் : போலீசார் விசாரணை
செவ்வாய்கிழமை காலை, டிசம்பர் 31, 2024, 7:15 க்கு சற்று முன்பு, செயின்ட் கேலன் திசையில் Gossau அருகே A1 நெடுஞ்சாலையில் பல போக்குவரத்து விபத்துகள் நிகழ்ந்தன.
**முதல் விபத்து: கார் தடுப்புச்சுவரில் மோதியது**
38 வயதுடைய நபர் ஒருவர் A1 இன் வேகமான பாதையில் சென்று கொண்டிருந்த போது அவரது கார் சறுக்கி வாகனம் பாதுகாப்புப் தடுப்பில் மோதியது. இதன்போது ஓட்டுநர் காயமடைந்து, அவசர சேவை மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது கார் பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் சேதத்துடன் இழுத்துச்செல்லப்பட்டது.

**இரண்டாவது விபத்து: வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த பெண்**
முதல் விபத்து நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, 32 வயதான பெண் ஒருவர் விபத்து நடந்த இடத்தைக் கவனித்ததால் தனது காரைக் கடுமையாக பிரேக் செய்தார். இதன்போது அவள் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தாள், அது சறுக்கி,பாதுகாப்புப் தடுப்பில் மோதியது. அவர் காயமடையவில்லை என்றாலும், அவரது வாகனம் மொத்தமாக 20,000 பிராங்குகள் சேதத்தை சந்தித்தது.
**மூன்றாவது சம்பவம்: பின்பக்க மோதல்**
இரண்டு விபத்துகளுக்குப் பிறகு, அதே இடத்தில் மேலும் இரண்டு கார்கள் மோதிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான சரியான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Kapo SG