லூசெர்ன் கன்டோனில் தொடர்ச்சியான விபத்துகள் – இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் கடுமையாக காயம்
கடந்த வார இறுதியில் சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் கன்டோனில் பல்வேறு சாலை விபத்துகள் இடம்பெற்றன. இதில் பெரோமுன்ஸ்டர், ஆல்ட்புரோன் மற்றும் எஷென்பாக் பகுதிகளில் நடந்த விபத்துகள் அதிக கவனம் பெற்றன. நான்கு வாகனங்கள் மோதிய விபத்து, மோட்டார் சைக்கிள் சறுக்கி விபத்துக்குள்ளான சம்பவம், மேலும் சுழற்சி வட்டத்தில் (Kreisel) மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் கடுமையாக காயமடைந்த விபத்துகள் ஆகியவை பதிவாகின.
பெரோமுன்ஸ்டர்: நான்கு வாகனங்கள் மோதி விபத்து
ஞாயிற்றுக்கிழமை மாலை, சுமார் 7.30 மணிக்கு, பெரோமுன்ஸ்டர் நகரில் ஆர்காவெர்ஸ்ட்ராஸ்சே – பிளாக்கே சந்திப்பில் நான்கு கார்கள் மோதிய விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, யாரும் காயமடையவில்லை. ஆனால், மொத்த சேதம் சுமார் 25,000 ஃபிராங்காக மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மிசல்சாம் தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஆல்ட்புரோன்: மோட்டார் சைக்கிள் சறுக்கி மோ
தி கடுமையான காயம்
இதே போன்று மற்றுமொரு விபத்து ஞாயிற்றுக்கிழமை மதியம், 1.00 மணிக்கு, ஆல்ட்புரோனில் இருந்து எபெர்செக்கன் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி பாதுகாப்பு வேலியில் (Leitplanke) மோதி விழுந்தார். அவர் கடுமையாக காயமடைந்ததால், ரெட்டுங்ஸ்டீன்ஸ்ட் 144 அவசர சேவை மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மீட்பு பணியில் கிரோஸ்டீட்வில்-ஆல்ட்புரோன் தீயணைப்பு படையினர் பங்கேற்றனர்.

எஷென்பாக்: சுழற்சி வட்டத்தில் மோதி விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்
இது மாத்திரமின்றி சனிக்கிழமை மாலை, 4.00 மணிக்கு மேல், எஷென்பாக் நகரில் உள்ள «ரோத்த்லி» சுழற்சி வட்டத்தில் (Kreisel) விபத்து ஏற்பட்டது. ஒரு டெலஸ்கோப் லோடர் வாகனம் பின்புறத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதன் தாக்கத்தில் அவர் சாலையில் வீழ்ந்து கடுமையாக காயமடைந்தார். உடனடியாக ரெட்டுங்ஸ்டீன்ஸ்ட் 144 அவசர சேவை அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
மேலும், விபத்தில் தொடர்புடைய மற்றொரு வாகன ஓட்டுநருக்கு Care Team உளவியல் உதவி வழங்கியது. மீட்பு மற்றும் சாலை துப்பரவு பணிகளுக்காக அந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு, மாற்று வழித்தடங்கள் (Umleitung) ஏற்பாடு செய்யப்பட்டன. ஓபர்சீடல் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் பணியாற்றினர்.
@Staatsanwaltschaft Luzern