Gotthard ரயில் பாதை வழியாக அதிக ரயில்களை ஈடுபடுத்த திட்டம்.!! மார்ச் மாதத்தில் இருந்து கொத்தார்ட் சுரங்கப்பாதை வழியாக அதிக ரயில்கள் பயணிக்கவுள்ளது.
மார்ச் 2 ஆம் தேதி முதல், கொத்தார்ட் சுரங்கப்பாதையில் கூடுதல் ரயில்கள், சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று சுவிஸ் தேசிய ரயில்வே நிறுவனமான SBB தெரிவித்துள்ளது .
ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்தை இத்தாலி மொழி பேசும் டிசினோ மாகாணத்துடன் இணைக்கும் இந்த சுரங்கப்பாதை, 2023 ஆகஸ்ட்டில் ஒரு சரக்கு ரயில் பாதையில் இருந்து வந்த பிறகு ரயில் போக்குவரத்திற்கு மூடப்பட்டது.

எவ்வாறாயினும், மார்ச் மாதத்தில் இருந்து, ஒவ்வொரு வார இறுதியிலும் 38 பயணிகள் ரயில்கள் கோதார்ட் வழியாக இயக்கப்படும்- சனி காலை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மூன்று ரயில்களும்இ ஞாயிறு மதியம் முதல் தெற்கிலிருந்து வடக்கே நான்கு ரயில்களும் பயணிக்கும்.
இதன் மூலம் கூடுதலாக 4,300 பயணிகளுக்கு இடமளிக்க முடியும் என எஸ் பி பி தெரிவித்துள்ளது. மார்ச் 25 முதல், திங்கள் முதல் வெள்ளி வரை டிசினோவிலிருந்து ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்திற்கு ஆரம்ப ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.