யூதரை கொலை செய்ய முயற்சித்த சிறுவனை நாடுகடத்த திட்டம் சனிக்கிழமையன்று சூரிச்சில் யூதர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் சுவிட்சர்லாந்தில் பெரும் சர்ச்சையினையும் அதிர்வலைகளையும் தோற்றுவித்துள்ளது.
சனிக்கிழமையன்று சூரிச்சில் ஒரு யூத தந்தையை 15 வயது சுவிஸ்-துனிசிய இரட்டை குடியுரிமை பெற்ற சிறுவன் கத்தியால் குத்தி பலத்த காயப்படுத்தியிருந்தார்.
சூரிச்சின் மாவட்டம் 2 இல் நடந்த இத்தாக்குதல் சுவிட்சர்லாந்தில் நடந்த மூன்றாவது இரத்தக்களரி குற்றமாகும். இதில் குற்றவாளியான சிறுவன் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
Walter Bieri -Keystone
இருப்பினும் ஒரு சிறுவன் எப்படி தீவிரவாதியானான் என்ற சர்ச்சைகளும் கேள்விகளும் எழுந்தவண்முள்ளது. எனினும் யூத எதிர்ப்பு கத்தி தாக்குதலுக்குப் பிறகு, 15 வயது சிறுவனுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது இச்சம்பவத்திற்கு தொடர்ச்சியான எதிர்புகள் யூத சமூகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சூரிச் பாதுகாப்புத் தலைவர் மரியோ ஃபெஹ்ர் அந்த சிறுவனின் சுவிஸ் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
‘சுவிட்சர்லாந்தில் பயங்கரவாதிகளுக்கு இடமில்லை’ என்று அவர் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தின் பாதுகாப்புக்கு ‘குறிப்பிடத்தக்க வகையில் தீங்கு விளைவிப்பதாக’ இருந்தால், அவர்களது சுவிஸ் குடியுரிமையைப் பறிக்க முடியும்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பதின்ம வயதினரை நாடு கடத்துவது சிறப்பாக இருக்கும். குறிப்பாக சுவிட்சர்லாந்து மற்றும் துனிசியா இடையே இது தொடர்பான ஒப்பந்தம் இருப்பதாகவும் ஃபெஹ்ர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.