சுவிஸ் எல்லையில் சோதனையின் போது தப்பிக்க ரைன் நதியில் குதித்த நபர்.
மூன்று நாட்களுக்கு முன்பு, ஒரு ஸ்லோவாக்கிய நபர் சுவிட்சர்லாந்தை விட்டு ஓஸ்திரியா செல்ல முயன்றார். ஆனால், அவர் சென்ட்கேலன் மாகாணத்தின் ஆவ் (Au SG) எல்லையை கடந்தபோது போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் அவர் மீது திருட்டு (Einbruchdiebstahl) தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதும் தெரியவந்தது. இந்த தகவலை ஓஸ்திரியாவின் போராரல்பேர்க் மாநில போலீஸ் துறை செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.
அந்த நபரை எல்லை கடக்க விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இது அவருக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால், அவர் திடீரென தப்பிச் செல்வதற்குத் தீர்மானித்தார். அதற்காக நேரடியாக அருகில் உள்ள ரைன் நதிக்குப் போனார். எல்லை பாலத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சுமார் 12 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நதியை நீந்தி கடந்துவிட முயன்றார்.

ஆனால், எல்லை போலீசாரின் கண்களில் இருந்து அவர் தப்ப முடியவில்லை. நதி கடந்த பிறகு, எதிர் கரையில் ஏற்கனவே அவருக்காக காத்திருந்த போலீசர்கள் உடனே பிடித்து வைத்து நிறுத்தினர். சில நிமிடங்களில் ஓஸ்திரியா போலீசாரும் வந்தனர்.
பின்னர் அந்த சந்தேக நபரை எல்லை அருகே உள்ள லுஸ்டெனாவில் காவலில் எடுத்தனர். சட்டவிரோதமாக எல்லை கடந்ததற்காக இரு நாடுகளும் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளன. இருப்பினும், தற்போது அவர் மீண்டும் விடுதலையில் இருப்பதாக க்ரோனன் சைடுங்க் பத்திரிகை தெரிவித்துள்ளது.
@blick