சுவிட்சர்லாந்தில் பீர் குடிப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஐ விட தற்போது விற்பனை 2 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆயினும்கூட, குநடனளஉhடöளளஉhநn சுவிட்சர்லாந்தில் அதன் முன்னணி சந்தை நிலையை பாதுகாத்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சுவிஸ் மக்கள் குறைந்த அளவு பீர் குடித்து வருகின்றமையை இந்நிலமைகளினூடாக அறியமுடிகின்றது. இதனால் பீர் பாணங்களின் சில்லறை விற்பனைத் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்- சில்லறை விற்பனையில் பீர் விற்பனை 5 சதவீதம் குறைந்துள்ளது.
எனினும் ஆல்கஹால் அல்லாத பியர்கள் தற்போது பிரபலமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முழு சுவிஸ் பீர் சந்தையில் மது அல்லாத பியர்களின் பங்கு இப்போது 6 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.