சுவிட்சர்லாந்தில் சரக்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பல்வேறு ரயில் பாதைகள் புனரமைக்கப்பட உள்ளன.
இதனால் சரக்கு ரயில் போக்குவரத்து அதிகளவில் வரையறுக்கப்பட உள்ளது. தற்காலிக அடிப்படையில் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
வாலீஸ் கன்டோனிலிருந்து இத்தாலியின் மிலான் வரையிலான ரயில் பாதை மூன்று மாதங்களுக்கு மூடப்பட உள்ளது.
இவ்வாறு பதினைந்து ரயில் பாதைகள் புனரமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில இடங்களில் முழுமையாகவே ரயில் பாதைகள் மூடப்பட்டு ரயில் பாதைகள் புனரமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.