சுவிட்சர்லாந்தில் தானியங்கி அடிப்படையிலான வாகனங்கள் – சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரின் சில இடங்களில் சாரதியற்ற வாகனங்களை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பிலான சட்ட திருத்தம் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட உள்ளது. தானியங்கி அடிப்படையில் இயங்கக்கூடிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் சாரதிகள் இருந்தும் தானியங்கி அடிப்படையில் இயங்கும் வாகனங்களும் சில சந்தர்ப்பங்களில் முற்றும் முழுதாக தானியங்கி அடிப்படையில் சாரதி இன்றி இயங்கும் வாகனங்களும் வீதிகளில் போக்குவரத்து செய்வதற்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பிலான பல்வேறு சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தானியங்கி அடிப்படையில் வாகனங்களை செலுத்துவதன் மூலம் செலவுகளை குறைக்க முடியும் எனவும் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.