சுவிஸ் பேர்ன் மாகாணத்தில் ரயில் மோதுண்டு ஒருவர் பலி.! சனிக்கிழமை மாலை லெங்னாவ் ரயில் நிலையம் அருகே ஒருவர் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலையே பலியான சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செப்டம்பர் 23 2023 சனிக்கிழமையன்று இரவு 11 மணிக்கு சற்று முன்பு பேர்ன் மாகாணத்தில் உள்ள லெங்னாவ் ரயில் நிலையத்தில் ஒருவர் ரயிலில் அடிபட்டதாக பெர்ன் கன்டோனல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலீசாரால் மரணித்த ஒருவரின் உடலையே காணமுடிந்தது. போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது இது ஒரு விபத்து சம்பவமாகத்தான் இருக்க முடியும் எனத் தெரிவித்தனர்.
மேலும் அந்த நபர் லெங்னாவ் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க நினைத்தபோதே எதிரே வந்த ரயில் மீது மோதுண்டு இறந்துள்ளார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
ரயில் ஓட்டுனரால் அவசரகால பிரேக்கிங் உடனடியாக இயக்கப்பட்ட போதிலும் இந்த விபத்தை தடுக்கமுடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து காரணமாக ரயில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு மாற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னணி மற்றும் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பெர்ன் கன்டோனல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவரின் அடையாளத்திற்கு உறுதியான தடயங்கள் இருக்கின்ற போதிலும் முறையான அடையாளம் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் பேர்ன் கன்டோனல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Quelle: Regionale Staatsanwaltschaft Berner Jura-Seeland
Bildquelle: Wikipedia / JoachimKohlerBremen – Eigenes Werk /CC BY-SA 4.0