சுவிஸ் நாட்டில் பிரபாகரன் , பொட்டு உயிருடன் புதிய செய்தி உண்மையா? (வீடியோ) ஈழப்போராட்டம் நிறைவுபெற்று இன்று 14 வருடங்கள் ஆகும் நிலையிலும் இறுதி யுத்தம் எம் இனம் மீது ஏற்படுத்திய வடுக்கள் இன்றும் மறையவில்லை என்றாலும் யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இறந்தது தொடர்பான சர்ச்சை ஆரம்பத்தில் இருந்தே இருந்த ஒரு விடயம்.
தலைவர் பிரபாகரன் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். பொட்டு அம்மான் உட்பட முக்கிய தளபதிகளுடன் பிரபாகரன் தப்பித்தார்.. பிரபாகரன் நேரம் வரும் போது வெளியில் வருவார் என்கிற செய்திகள் எல்லாமே எமது கண்களும் காதுகளும் கேட்டும் பார்த்தும் புளித்துப்போன செய்திகளாக போய்விட்டது.
சுவிஸ் நாட்டில் மேதகு பிரபாகரன்
ஒரு கட்டத்தில் இவையெல்லாம் செய்திகள் அல்ல வெறும் கட்டுக்கதைகளும் தமிழீழத்தை அதிகமாக நேசிப்பவர்களது அசைக்கமுடியாத நம்பிக்கையும் மட்டும்தானே என்பது புரிந்து கொள்ள கூடிய ஒரு விடயமாக இருந்தது.
இவ்வாறான செய்திகளை இறுதி யுத்தம் நிறைவு பெற்று கொஞ்சகாலம் மக்கள் நம்பியது என்னமோ உண்மைதான். ஆனால் தற்போது மக்களும் இன்றைய தலைமுறையினரும் கொஞ்சம் சுயநினைவோடு சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள் என்பதே உண்மை.
சுவிஸ் நாட்டில் பிரபாகரன்
இப்படியிருக்க தற்போது ஒரு புதிய கதை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால் வே.பிரபாகரன் உட்ப அவரது மகள் மற்றும் பொட்டு அம்மான் உயிருடன்தான் இருக்கிறார்கள் என்ற அதிரடி தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரபாகரன் உட்பட அவரது மகள் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் சுவிற்சர்லாந்து நாட்டில் மறைந்திருப்பதாக ஒரு யூரிப் பிரபலம் செய்தி வெளியிட்டுள்ளார். குறித்த காணொளியில் பேசிய அவர் சுவிற்சர்லாந்தில் இருக்கும் புலிகளின் முன்னாள் நிதி செயற்பாட்டாளர் ஒருவராலையே இந்த தகவல் பரப்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரனுக்கு தற்போது மருத்து உதவிகள் தேவைப்படுவதாகவும் அதற்கு அதிக செலவாகும எனவும் இதனால் உடனடியாக ஈழத்தமிழர்கள் நிதி உதவியை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டதாக ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதாக மேற்கோள் காட்டி குறித்த காணொளியில் அவர் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் நாட்டில் பிரபாகரன்
இத்தகவலை கேள்வியுற்ற முன்னால் போராளிகள் பலர் உணர்ச்சிவசப்பட்டு பண உதவிகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சிலர் இதனை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் பின்னர் அதனுடன் சம்மந்தப்பட்ட நபர் அவர்களை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று முகமூடி அணிந்த இரு பெண்களை சந்திக்க வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முகமூடி அணிந்து பேசி அந்த இரு பெண்களின் பின்புலத்தில் தான் பிரபாகரன் உட்பட அவரது மகள் மற்றும் பொட்டு அம்மான் தலைறைவாக இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தாக அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் தமிழகத்தில் இருக்கின்ற முக்கிய தமிழீழ ஆதரவு அரசியல்வாதிகள் கூட பிரபாகரன் இருக்கிறார். மீண்டும் வருவார் என்று பேசி வந்த நிலையில் அவர்களும் தற்போது மௌனிகளாகவே இருக்கிறார்கள். மேலும் அரசியல் மேடைகளில் பகிரங்கமாகவே பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று முழங்கி வந்த ‘சீமான்’ கூட தற்போது அது பற்றி வாய் திறப்பதில்லை.
பலரும் தங்களது சுய லாபங்களுக்காக மட்டும் அந்தந்த நேரங்களில் தமிழீழம் என்ற ஆயுதத்தையும் பிரபாகரன் என்ற ஆளுமையையும் கையில் எடுத்து பிழைப்பு நடாத்துகிறார்கள் என்ற உண்மையும் எமது மக்களுக்கு புரியாமல் இல்லை.
சுவிற்சர்லாந்தில் பிரபாகரன் இருக்கிறார் என்ற அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது அல்லது உறுதிப்படுத்தப்பட முடியாத ஒரு தகவலாகவே எம்மால் பார்க்கப்படுகிறது. குறித்த யூரியுப் காணொளியில் பேசிய இன்பா என்ற அந்த நபரும் இது வயிற்றுப்பழைப்புக்காக சிலர் பரப்பும் வதந்தி என்ற கருத்துப்படவே பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்ணால் காண்பதும் பொய்இ காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற கருத்து தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடயத்தில் சரிப்பட்டு வராத ஒரு பேச்சு.. மாறாக கண்ணால் கண்டால் மட்டும் பிரபாகரன் பற்றிய உண்மைகள் புலப்படும் என்பது நிஐம். வதந்திகளுக்கும்.. சர்ச்சைகளுக்கும் மிகச்சிறந்த பதிலை தரமுடியுமாக இருந்தால் அது ‘காலம்’ என்ற ஒன்றால் மட்டுமே முடியும்.. காத்திருப்போம்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.