Bilten GL A3 நெடுஞ்சாலையில் அதிகவேகமாக பயணித்த கார் விபத்துக்குள்ளானது. இன்று வியாழக்கிழமை, ஜனவரி 19, 2023 அன்று, காலை 7.40 மணியளவில், பில்டனில் (Bilten) உள்ள A3 நெடுஞ்சாலையில் சொத்து சேதத்துடன் போக்குவரத்து விபத்து ஏற்பட்டது.
Bilten GL A3 நெடுஞ்சாலையில் அதிகவேகமாக பயணித்த கார் விபத்துக்குள்ளானது
ஒரு பயணிகள் காரை ஓட்டுபவர், சாலையில் பனி படர்ந்திருந்த நிலையிலும் சூரிச் நோக்கி வேகமாக பயணித்துள்ளார். இதன் போதே 32 வயதான சுபாருவி காரை ஓட்டிச்சென்ற அந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானார். கார் சறுக்கி, சாலையில் இருந்து வலது பக்கம் சென்று வேலியில் மோதியது.
விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் வாகனம் மற்றும் சாலை உபகரணங்களுக்கு சொத்து சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.