சூரிச் Hedingen பகுதியில் அதிகாலையில் கொள்ளை முயற்சி – இருவர் கைது திங்கட்கிழமை இரவு (ஜனவரி 9, 2023), Hedingen இல் இரண்டு சந்தேகத்திற்கிடமான கொள்ளையர்களை சூரிச் கன்டோனல் போலீசார் கைது செய்தனர்.
ஒரே இரவில் Hedingen மற்றும் Zwillikon இல் பல திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவங்களோடு தொடர்புடையவர்களாக கருதப்பட்டே மேற்படி இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் :-
சூரிச் Hedingen பகுதியில் அதிகாலையில் கொள்ளை முயற்சி – இருவர் கைது
ஜனவரி 9 காலை 5 மணிக்கு முன்னதாக ஒரு குடியிருப்பு வாசியால் போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டது. குறித்த நபர் தனது குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் பதுங்கி இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சூரிச் கன்டோனல் போலீசார் அப்பகுதியில் சந்தேக நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, Hedingen ல் போலீஸ் அதிகாரிகள் இரண்டு அல்ஜீரியர்களைக் கண்டனர், போலீசாரைக்கண்ட அவர்கள் ஒளிந்து கொள்ள முயற்சித்துள்ளனர். உடனடியாக செயற்பட்ட போலீசார் அந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
சம்பவ இடத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரும் பல சொத்துக்களை உடைத்து பல ஆயிரம் பிராங்குகள் மதிப்பிலான சொத்துக்களை திருடியதாக சந்தேகிக்கப்படுகிறது.
மேலும் சொத்துக்கள் மற்றும் வாகனங்களை உடைக்க முயன்றதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பிறகு, கைது செய்யப்பட்டவர்கள் அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.