சுவிட்சர்லாந்து பொருளாதாரத்தில் சூரிச்சின் பெரும் பங்கு
சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தில் சூரிச் கன்டோன் முக்கிய சக்தியாகத் தொடர்ந்து விளங்கி வருகிறது. Zürcher Kantonalbank வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வின் படி, சூரிச் மட்டும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.
சேவைத் துறை இங்கு முக்கியமான ஆதாரமாக உள்ளது. சுவிட்சர்லாந்தின் மொத்த சேவைத் துறையின் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு சூரிச்சில் இருந்து உருவாகிறது. வங்கி, காப்பீடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதி சேவைகள் போன்ற துறைகள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

மேலும், சூரிச்ச் கன்டோனின் பொருளாதார உற்பத்தியின் சுமார் 70 சதவீதம் சேவைத் துறையிலிருந்து கிடைக்கிறது. இது அந்தப் பகுதி உயர்ந்த சேவை சார்ந்த பொருளாதார மையமாக உருவெடுத்துள்ளதை காட்டுகிறது.
சுவிட்சர்லாந்தின் நிதி மற்றும் வணிக மையமாகக் கருதப்படும் சூரிச்ச், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் புதுமை வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் முக்கிய தூணாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.