வீட்டு தட்டுப்பாடு: பாலியல் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கிடைப்பதில் சிரமம்
சுவிட்சர்லாந்தில் சிவப்பு விளக்கு பகுதிகள் மற்றும் பாரம்பரிய வணிக நிலையங்கள் குறைந்து வரும் நிலையில், பல பாலியல் தொழிலாளர்கள் தற்போது தனியார் அபார்ட்மெண்ட்களில் பணியாற்றுவதையே தேர்வு செய்கிறார்கள். குறிப்பாக குறுகிய கால தங்குதவிக்காக தயார் செய்யப்பட்ட “பிசினஸ் அபார்ட்மெண்ட்கள்” அவர்களுக்கு எளிதான மற்றும் தனியுரிமை கொண்ட இடமாக உள்ளது.
ஆனால் நாட்டின் பல நகரங்களில் வீட்டு தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், இந்த தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வீடு வாடகைக்கு கிடைப்பது மிகவும் கடினமாகியுள்ளது என்று Blick செய்தி வெளியிட்டுள்ளது.
சூரிச் நகரில் பாலியல் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் Heilsarmee Rahab அமைப்பின் பொறுப்பாளர் கொர்நேலியா சூறர் ரிட்டர் கூறுகையில், இவ்வகை அபார்ட்மெண்ட்கள் அவர்களுக்கு அமைதியான மற்றும் அடையாளம் தெரியாத சூழலை வழங்குகின்றன. மேலும், அதிக வாடகை வசூலிக்கும் அறைகள் அல்லது வருமானத்தில் பங்கு எடுக்கும் வணிக நிலையங்களுக்கு மாற்றாகவும் இது உதவுகிறது.

ஆனால், வீட்டு பற்றாக்குறை காரணமாக தற்போது பாலியல் தொழிலாளர்களுக்கு வீடு வழங்க பலரும் தயங்குகின்றனர். இதனால், அவர்களுக்கு குடியிருப்பு பெறுவது மிகக் கடினமான ஒன்றாக மாறியுள்ளது.
இதே நேரத்தில், இவ்வகை அபார்ட்மெண்ட்களை நடத்தும் நிறுவனங்களும் இந்த பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. Visionapartments நிறுவனத்தின் நிர்வாகம், இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை, சுவிட்சர்லாந்தில் வீட்டு வசதி பற்றாக்குறை சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது.