சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பனிப்பாறை சரிவில் 24 வயதுடைய நபர் பலி சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற பனிப்பாறை சரிவில் 24 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் க்ராபுன்டன் கான்டனின் Piz Radönt பகுதியில் இந்த பனிப்பாறை சரிவு சம்பவம் பதிவாகியுள்ளது.

பனிப்பாறை மலை உச்சிக்கு கீழ் இருந்த போது பனிப்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளன. பனிப்பாறை சரிந்தவுடன் பனிமலையேறிக் கொண்டிருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 24 வயதுடைய இளைஞர் பனிப்பாறையிலிருந்து சுமார் 100 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். பனிப்பாறை சரிவில் சிக்கியவர்களில் ஒருவர் மீட்புப் பணியாளர்களுக்கு உடன் அறிவித்த காரணத்தினால் ஏனையவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.