பொதுப் போக்குவரத்து கட்டணத்திற்கு ‘Bibo’ புதிய செயலி அறிமுகம்
சுவிட்சர்லாந்தில் பொதுப் போக்குவரத்து கட்டண முறையை எளிதாக்கும் நோக்கில் புதிய மொபைல் செயலி அறிமுகமாக இருக்கிறது. ‘Bibo’ எனப்படும் இந்த தானியங்கி கட்டண அமைப்பு, பயணிகள் பேருந்து, ரயில் அல்லது டிராம் போன்றவற்றில் ஏறும் தருணத்தை Bluetooth தொழில்நுட்பத்தின் மூலம் தானாகவே கண்டறிந்து, பயணம் முடிவில் கட்டணத்தை கணக்கிடும் முறையில் செயல்படுகிறது.
இந்த புதிய திட்டத்தை SwissPass Alliance முன்னெடுத்து வருகிறது. அவர்களின் தகவலின்படி, இந்த செயலியின் சோதனை திட்டம் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இதில் சுமார் 3,000 பேர் பங்கேற்கவுள்ளனர்.
Neu soll auch ohne Ein- und Auschecken das richtige ÖV-Billett berechnet werden. (Symbolbild)
இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், பயணங்களை சரியாக பதிவு செய்யும் திறன், கட்டண கணக்கீட்டின் துல்லியம் மற்றும் பயனர் அனுபவம் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதாகும். சோதனைக்குழுவில் இருந்து பெறப்படும் கருத்துக்கள், இந்த செயலியை எதிர்காலத்தில் முழுமையாக அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய அடிப்படையாக இருக்கும்.
சுவிட்சர்லாந்தில் பொதுப் போக்குவரத்து ஏற்கனவே மிகச் சிறப்பாக அமைந்துள்ள நிலையில், இந்த புதிய ‘Bibo’ செயலி அறிமுகம் பயணிகளை டிக்கெட் வாங்கும் சிக்கல்களிலிருந்து விடுவித்து, மேலும் சுலபமான மற்றும் டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.