Chur இல் நடந்த கொள்ளை முயற்சி – நாயுடன் இரண்டு இத்தாலியர்கள் கைது.!!
திங்கள்கிழமை இரவு Chur இல் இரண்டு திருடர்கள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்கள். குறித்த 2 திருடர்களின் கைது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்றுவருகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
திங்கள்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு Chur இல் வசிப்பவர் இச்சம்பவத்தை நேரில் பார்த்ததாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து அவர் விபரிக்கையில், ஜன்னல் உடைக்கும் சத்தம் கேட்டது. உடனடியாக பாதுகாப்பான தூரத்தில் இருந்து அவதானித்துக்கொண்டிருந்தேன்.
Chur இல் நடந்த கொள்ளை
ஒரு வணிக கட்டிடத்தில் முற்றிலும் உடைக்கப்பட்ட கண்ணாடி கதவு மற்றும் ஒரு நாயுடன் இரண்டு பேர் இருப்பதைக் கண்டுபிடித்து, காவல்துறை அவசர எண்ணுக்கு அழைப்பு எடுத்து சொன்னதாக குறிப்பிட்டார்.
Chur நகர காவல்துறையின் இரண்டு ரோந்துப் படையினர், சந்தேகத்திற்கிடமான கொள்ளையர்களைக் கைது செய்து, கிராபண்டன் கன்டன் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் Graubünden பகுதியைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாயுடன் வந்து கொள்ளையில் ஈடுபட்ட அவர்கள் இத்தாலி நாட்டைச்சேர்ந்தவர்கள் எனவும் இவர்களின் கைதுக்கு பின் அவர்களது நாய் விலங்குகள் பராமரிப்பு நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளது.