குளிர்கால மீட்பு பணிகளுக்கு ரெகா தயார்நிலையில்
Swiss Air-Rescue Rega குளிர்காலத்தில் அதிகரிக்கும் அவசர நிலைகளை எதிர்கொள்ள முழுமையான தயாரிப்புகளுடன் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக பனிச்சறுக்கு உள்ளிட்ட குளிர்கால விளையாட்டுகளில் ஏற்படும் விபத்துகளுக்கு, வான்வழியாக விரைவான மற்றும் தொழில்முறை மருத்துவ உதவியை வழங்க ரெகா தனது நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது.
நல்ல வானிலை மற்றும் சிறந்த பனி நிலை காணப்படும் நாட்களில் மீட்பு பணிகள் அதிகரிக்கும் என்பதால், டிசம்பர் 26 முதல் Berner Oberland மற்றும் Graubünden பகுதிகளில் கூடுதல் ஹெலிகாப்டர் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. அதேபோல், Untervaz மற்றும் Wilderswil ஆகிய ரேகா தளங்களிலும் கூடுதல் மீட்பு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.

மேலும், சூரிச் விமான நிலையத்தில் உள்ள ரேகாவின் தேசிய விமான மீட்பு மையமும் கூடுதல் பணியாளர்களுடன் வலுப்படுத்தப்படுகிறது. பனிச்சறுக்கு பாதைகளில் விபத்து ஏற்பட்டால், முதற்கட்ட உதவி மற்றும் காயத்தின் தீவிரத்தை மதிப்பிடும் பிஸ்ட் மீட்பு சேவைகளுடன் இணைந்து ரேகா செயல்படுகிறது.
சராசரியாக ஆண்டுதோறும் 1,700 முதல் 3,000 வரை காயமடைந்த குளிர்கால விளையாட்டாளர்களை ரேகா வான்வழியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறது. குளிர்காலம் தொடங்குவதற்கு முன், குழுவினருக்கு பனிச்சரிவு தொடர்பான பயிற்சிகள், உபகரண சோதனைகள் மற்றும் நடைமுறை தேடுதல் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவசர சூழ்நிலைகளுக்கு முழுமையாக தயார் செய்யப்படுகிறது.
© Rega