சூரிக்–வில்னியஸ் (Vilnius) இடையே புதிய நேரடி விமான சேவை
சுவிட்சர்லாந்திலிருந்து பால்டிக் நாடுகளுக்கான விமான இணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஏர் பால்டிக் விமான நிறுவனம் புதிய நேரடி சேவையை அறிவித்துள்ளது. 2026 மே 3ஆம் தேதி முதல், சூரிக் மற்றும் லிதுவேனியாவின் தலைநகரான வில்னியஸ் இடையே புதிய nonstop விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
இந்த புதிய வழித்தடத்தில் வாரத்திற்கு மூன்று விமானங்கள் இயக்கப்படும். திங்கள், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சேவை கிடைக்கும் என ஏர் பால்டிக் தெரிவித்துள்ளது. வணிக பயணிகள் மட்டுமன்றி, சுற்றுலா மற்றும் உறவினர் சந்திப்புக்காக பயணம் செய்யும் பயணிகளுக்கும் இந்த சேவை பெரிதும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சுவிட்சர்லாந்திலிருந்து பால்டிக் பிராந்தியத்திற்கு சூரிக்–ரிகா மற்றும் ஜெனீவா–ரிகா என்ற விமான சேவைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து, சூரிக்–வில்னியஸ் புதிய விமான இணைப்பு தொடங்கப்படுவதன் மூலம், சுவிட்சர்லாந்து மற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளுக்கிடையேயான விமான தொடர்பு மேலும் விரிவடைகிறது.
லிதுவேனியா, சமீப ஆண்டுகளில் தொழில்நுட்பம், வணிக முதலீடுகள் மற்றும் சுற்றுலா வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ள நாடாகும். இந்த பின்னணியில், சூரிக்–வில்னியஸ் நேரடி விமான சேவை இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சுற்றுலா உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என விமானத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
© KeystoneSDA