வோட் கன்டோனில் சோகம் : 9 வயது சிறுவன் மீது கார் மோதி பலி.!
சுவிட்சர்லாந்தின் வடக்கு வோட் கன்டோனில் உள்ள கிராண்ட்சன் ( Grandson) பகுதி அருகிலுள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்த 9 வயது சிறுவன் மீது கடந்த திங்கட்கிழமை (8 டிசம்பர் 2025) பிற்பகல் ஒரு காரை ஓட்டிய நபர் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் தகவலின்படி, மதியம் சுமார் 13.30 மணியளவில் (ரூட் டே ல பிரின்ஸ்) Route de la Brinaz சாலையில் நடந்த இந்த சம்பவத்தில், 47 வயதுடைய ஒரு ஸ்விஸ் நாட்டவர் ஓட்டி வந்த காரின் கட்டுப்பாடு திடீரென சாலையிலிருந்து விலகி, பாதசாரிகள் நடைபாதை நோக்கி சென்றது. அந்த நேரத்தில் நடைபாதையில் இருந்த சிறுவன் நேரடியாக மோதியதில் கடுமையாக காயமடைந்தார்.
அங்கிருந்த ஒரு நபர் உடனடியாக முதல் உதவி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவசர சேவையின் 144 குழுவும், சுவிட்சர்லாந்தின் அவசர விமான சேவையான Rega ஹெலிகாப்டரும் சம்பவ இடத்துக்கு வந்தன. சிறுவன் கடுமையான நிலையில் CHUV மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சைக்கு பிறகும் அவர் உயிரிழந்தார்.

கார் ஓட்டிய நபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் போலீசார் விசாரித்த பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த துயர சம்பவம் தொடர்பாக பொது குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். போக்குவரத்து நிபுணர்கள் காரணம் குறித்து மேலான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து சுவிட்சர்லாந்தில் சமீப காலங்களில் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களைச் சுற்றியுள்ள சாலை பாதுகாப்பு கவலைகளை மீண்டும் முன்வைத்துள்ளது. உள்ளூர் மக்கள், பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Kapo Waadt