2024-ல் 9.4 பில்லியன் பிராங்க் செலவு : சுவிஸில் உச்சத்தை தொட்ட மருத்துவச்செலவுகள்
சுவிஸில் மருந்துகளுக்கான செலவுகள் 2024ஆம் ஆண்டில் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளன. Helsana Medicines அறிக்கையின் படி, கடந்த ஆண்டு மருந்து செலவுகள் மொத்தமாக 9.4 பில்லியன் பிராங்க் சென்றுள்ளது. இது முன் ஆண்டை ஒப்பிடும்போது 3.6 சதவீத உயர்வாகும்.
இந்த அறிக்கை, சுவிஸின் பல பகுதிகளில் மருந்துச் செலவுகள் மிகுந்த வேறுபாடு கொண்டதாகவும் காட்டுகிறது. தனிநபர் அடிப்படையில் பார்க்கும்போது, டிசினோ கன்டோன் 1,180 பிராங்க் செலவில் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து பாசல்-சிட்டி மற்றும் பாசல்-கன்டோன் இரண்டும் 1,105 பிராங்க், கிரௌவ்வுன்டன் 1,101, சோலோதுர்ன் 1,085, மற்றும் ஜெனீவா 1,084 பிராங்க் செலவுகளுடன் தேசிய சராசரியான 1,019 பிராங்கை விட அதிகமாக செலவிடுகின்றன.

உயர் மருந்துச் செலவு காணப்படும் கன்டோன்களில் பெரும்பாலும் மூத்த குடியிருப்பாளர்கள் அதிகமாக உள்ளனர். மேலும், சிறப்பு மருத்துவ சேவைகள் அதிகம் செறிந்துள்ளதும், அடிக்கடி சிகிச்சை மற்றும் மருந்து பரிந்துரைகளில் கவனம் செலுத்தும் மருத்துவ நடைமுறைகளும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
சுவிஸில் சுகாதார செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மருந்துச் செலவின் இந்த அதிகரிப்பு எதிர்காலத்தில் மருத்துவ காப்பீடு பிரீமியங்களிலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், அரசியல் மற்றும் சுகாதாரத் துறைகளில் இதற்கு தீர்வு காண வேண்டிய அவசியம் நிபுணர்களால் வலியுறுத்தப்படுகிறது.
© SDA