சூரிக் மைய ரயில் நிலையத்தில் திருட்டு பொருட்களுடன் இளைஞர் கைது
சூரிக் காண்டோன் போலீஸ், செவ்வாய்க்கிழமை (02.12.2025) பிற்பகல் சூரிக் மைய ரயில் நிலையத்தில் (HB) திருட்டு பொருட்களுடன் இருந்த ஒரு இளைஞரை கைது செய்துள்ளது. ரயில் நிலையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், ஒரு இளைஞர் E-ஸ்கூட்டரில் வேகமாக செல்வதை போலீஸ் உளவு அதிகாரிகள் கவனித்துள்ளனர். பாதுகாப்பு விதிகளை மீறியதால் அவர் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
சோதனையில், சந்தேகத்திற்கிடமாக பல ஆபரணங்கள், பயன்படுத்தப்பட்ட மின்சாதனங்கள், கைகள்பைகள் மற்றும் அழகுசாதனங்கள் அவரது வசம் இருந்தது. இதனால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தொடர்ந்த விசாரணையில், அவர் பயன்படுத்திய E-ஸ்கூட்டர் திருடப்பட்டது என்பதும், அவரது கைப்பையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் முன்தினம் புலாக் மாவட்டத்தில் நடைபெற்ற குடியிருப்பு திருட்டில் களவாடப்பட்டவை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
18 வயதான இந்த இத்தாலிய இளைஞர் ஆரம்ப விசாரணைக்குப் பிறகு மாநில வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டார். சூரிக் பகுதியில் சமீபகாலமாக வணிக மற்றும் குடியிருப்பு இடங்களில் சிறு அளவிலான திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த கைது காவல்துறைக்கு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
© Kapo ZH