ஜெனீவாவில் சைக்கிள்–இ-பைக் நேருக்கு நேர் மோதல்: 51 வயது நபர் உயிரிழப்பு
ஜெனீவாவில் கடந்த மாதம் இடம்பெற்ற சாலை விபத்தில் 51 வயது ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளது. சான்சி (Chancy) சாலையில் ஒரு சைக்கிள் மற்றும் இ-பைக் நேருக்கு நேர் மோதியதில் இந்த துயர சம்பவம் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்து நேரத்தில் 16 வயது இளைஞர் ஒருவர் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். சந்திப்பை கடக்கும் போது, அவர் ஓட்டிய சைக்கிளும், எதிரே வந்த இ-பைக்கும் பலமாக மோதின. அதில், இ-பைக் ஓட்டிய 51 வயது நபர் அருகே சென்றுகொண்டிருந்த ஒரு காரின் பக்கவாட்டில் இழுத்துச் செல்லப்பட்டு கடுமையாக காயமடைந்தார்.

உடனடியாக அவர் ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் தீவிர காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். சைக்கிளில் வந்த இளைஞர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த மரணம், 2025ஆம் ஆண்டில் ஜெனீவாவில் பதிவாகும் ஏழாவது சாலை உயிரிழப்பு என்பதால் கவனம் ஈர்த்துள்ளது. நகரத்தில் சைக்கிள் மற்றும் இ-பைக் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பயணிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.