பேக்கேஜ் காலி: 2000 ஃபிராங்க் செலுத்திய ஐபோனுக்குப் பதில் வெறும் பெட்டியே கிடைத்த Zürcher இளைஞர்
சூரிச்சின் டியட்டிகன் பகுதியில் வசிக்கும் 19 வயது இளைஞன், புதிய iPhone 17 Pro Max வாங்கிய மகிழ்ச்சியில் இருந்தார். Interdiscount ஆன்லைன் கடையில் 2000 ஃபிராங் பணம் செலுத்தி ஆர்டர் செய்த அவர், டெலிவரி நாளில் வீட்டிலேயே காத்திருந்தார். ஆனால் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபோனுக்குப் பதிலாக, அவர் பெற்றது திறந்த நிலையில் இருந்த ஒரு காலியான பெட்டிதான்.
பொதுவாக இத்தகைய மதிப்புள்ள பொருட்கள் கையொப்பத்துடன் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால், அவர் முன்பே தபால் ஊழியருக்கு ‘Post Box ல் வைத்து விட அனுமதி அளித்திருந்தாராம். “நான் வீட்டிலேயே இருப்பதால் பிரச்சனை இல்லை என்று நினைத்தேன்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.. ஆனால் அதுவே பெரிய தவறாகி விட்டது. தபால் ஊழியர் மணி அழைக்காமல், நேராக பெட்டியை Post-பாக்ஸில் வைத்து சென்றார்.
பின்னர் அவர் உங்கள் பொருள் வெற்றிகரமாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்ற மின்னஞ்சலை பெற்றுள்ளார். . உடனே கீழே ஓடி பார்த்தபோது, பேக்கேஜ் திறந்த நிலையில் இருந்தது. உள்ளே இருக்க வேண்டிய iPhone காணாமல் போயிருந்தது. அவர் உடனடியாக புகார் அளித்தார். ஆனால் Interdiscount மற்றும் டெலிவரி சேவையான DPD இருவரும் பொறுப்பை ஏற்க மறுத்தனர்.

DPD நிறுவன பேச்சாளர் கூறியதாவது: “இந்த மாதிரியான ‘Comfort’ சேவையில், வாடிக்கையாளர் தளத்தில் வைக்க அனுமதி அளித்தால், கையொப்பம் இன்றி பொருள் வைக்கப்படலாம். அந்த கட்டத்தில் அபாயத்துக்குப் பொறுப்பு வாடிக்கையாளருக்கே செல்கிறது.” Interdiscount நிறுவனமும் இதே கருத்தைத் தெரிவித்தது.
பொருள் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன என்று சூரிச் காவல்துறை தெரிவித்துள்ளது. “தெளிவான சாட்சிகள் இல்லாதபோதும், இத்தகைய திருட்டுகளில் காவல்துறையில் புகார் அளிப்பது முக்கியம்,” என்று அவர்கள் அறிவித்தனர்.
சுவிட்சர்லாந்தில் ஆன்லைன் டெலிவரிகள் அதிகரித்து வரும் நிலையில், மதிப்புள்ள பொருட்களுக்கு கையெழுத்து பெற்றே டெலிவரி பெற வேண்டும் என்ற எச்சரிக்கை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவு படைக்கிறது.
© Blick