ஜெனீவாவில் ஒருமுறை பயன்படுத்தும் e-cigarettes விற்பனைக்கு தடை – மீறினால் ரூ.40,000 அபராதம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாநிலத்தில் இருந்து இன்று முதல் ஒருமுறை பயன்படுத்தும் disposable e-cigarettes விற்பனை செய்வது சட்டவிரோதமாகியுள்ளது. மாநில அரசின் புதிய தடை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது, இதை மீறி விற்பனை செய்யும் கடைகளுக்கு அதிகபட்சமாக 40,000 சுவிஸ் பிராங்க் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா அரசு இதன் நோக்கம் பொதுமக்களின் உடல் நலத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதே என விளக்கியுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் e-cigarette அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குவதுடன், இளம் தலைமுறையில் புகைபிடிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கக்கூடும் என்பதையும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் புகையிலை துறையின் உலகப் பிரமாண்டமான பிலிப் மோரிஸ் (Philip Morris) இந்த முடிவை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது. அந்த நிறுவனம் கூறுவதாவது, கூட்டாட்சி சட்டம் (Federal Law) இன்னும் இத்தகைய பொருட்களின் விற்பனையை அனுமதிக்கிறது என்பதால், ஜெனீவாவின் தனிப்பட்ட முடிவு நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அதிகாரிகள், மீண்டும் சார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய rechargeable e-cigarettes சட்டபூர்வமாக தொடர அனுமதி உண்டு என தெளிவுபடுத்தியுள்ளனர்.
புகையிலைப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளில் சுவிட்சர்லாந்து சமீப ஆண்டுகளில் பல மாநிலங்கள் தனித்தனி விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இளம் தலைமுறையை நிக்கோடின் பழக்கத்திலிருந்து விலக்குவது அரசின் முக்கிய குறிக்கோளாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
© WRS