மாலை வேளைகளில் அதிக இருட்டு : திருடர்கள் கைவரிசை.! போலீசார் எச்சரிக்கை.!!
சுவிட்சர்லாந்தில் இலையுதிர் காலம் தொடங்கியுள்ளதால், மாலை வேளை வேகமான இருளாவதால் இந்த நேரத்தில் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. காவல்துறை இதற்காக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரவு நேரம் விரைவாக வரும் இதுபோன்ற காலங்களில், திருடர்கள் பெரும்பாலும் வெளிச்சமில்லாத வீடுகளையும் வெறிச்சோடிய தெருக்களையும் இலக்காகக் கொள்ளும் வழக்கம் உண்டு. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது விளக்குகள் எரிந்துகொண்டு இருப்பதை உறுதி செய்யவும், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் நன்கு பூட்டப்பட்டுள்ளனவா எனச் சரிபார்க்கவும் போலீஸ் அறிவுறுத்துகிறது.
மேலும், அயல்நாட்டு அல்லது அப்பகுதியைச் சேர்ந்தவர்களல்லாத சந்தேகத்திற்கிடமான நபர்கள் சுற்றி வருவது போன்ற நிகழ்வுகள் தென்பட்டால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. “முக்கியமாக மாலை நேரங்களில் கவனமாக இருங்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தில் இலையுதிர் மற்றும் குளிர்கால மாதங்களில் வீட்டுத் திருட்டுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதனால் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துதல், தானியங்கிக் கதவு பூட்டுகள் மற்றும் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்துதல் போன்ற நடவடிக்கைகள் அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன.
பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க அனைவரும் விழிப்புடன் இருந்து, சந்தேகமான செயல்கள் குறித்து உடனே காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். இது தொடர்பில் ஸ்வீஸ் மாநில போலீசார் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ இதோ எமது SwissTamilTv பார்வையாளருக்காக…