பெர்னில் உள்ள ‘நெல்சன் பப்’ல் சுகாதார குறைபாடுகள் – உரிமையாளருக்கு அபராதம்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள ஸ்வார்ட்ஸ்டோர் சாலையில் அமைந்துள்ள “நெல்சன் பப்” உணவகத்தில் கடுமையான சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மாநில உணவு ஆய்வாளர்கள் ஜூன் மாதம் திடீர் ஆய்வின்போது, பானங்களுக்கான குளிர்சாதனப் பெட்டியில் பூச்சிகள், திறந்தபடி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அழுக்கான சமையலறை உபகரணங்கள் இருந்ததாக கண்டனர்.
மேலும், குளிர்சாதன வெப்பநிலை விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, சில உணவுகளில் அலர்ஜி தகவல் அல்லது திறந்த தேதி குறிப்பிடப்படாததும் பதிவாகியுள்ளது. மேலும், குளிர்சாதன வெப்பநிலை விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. பாக்கெட் ரொட்டிகள் (baguettes) போன்ற உறைந்த உணவுகள் போதுமான அளவு குளிர்விக்கப்படவில்லை. பிளேட்டுகளை கழுவும் இயந்திரத்தில் (dishwasher) தானியங்கி சுத்திகரிப்பு மருந்து விநியோகம் செயலிழந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, உரிமையாளருக்கு சுவிஸ் ஃப்ராங்க் 1,175 அபராதமும், 300 ஃப்ராங்க் வழக்குச் செலவுகளும் விதிக்கப்பட்டன. பப் மேலாளர் சம்பவத்தை ஒப்புக்கொண்டு, இனி அனைத்து பகுதிகளிலும் சுத்தம் மற்றும் சுகாதார விதிகளை கடுமையாக பின்பற்றுவோம் என தெரிவித்தார்.
© KeystoneSDA