2023ம் ஆண்டில் சுவிஸ் மக்கள் மின்சாரத்துக்கு மிகவும் அதிக கட்டணம் செலுத்தவேண்டிய நிலை உருவாகும் என சுவிஸ் மின்வழங்கல் நிறுவனங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மின்சாரம் உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதால், சுவிட்சர்லாந்தில் மின்சார கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2023ம் ஆண்டளவில் மின் கட்டணத்தை 20 சதவிகிதம் வரை அதிகரிக்க மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அத்துடன் மின் கட்டண உயர்வு சீராக அனைவருக்கும் ஒரே மாதிரியாகவும் இருக்கப்போவதில்லை எனவும் கூறப்படுகின்றது.

அந்த வகையில் மின்சாரத்தை வேறொருவரிடமிருந்து வாங்கி விற்போர் வழங்கும் மின்சாரத்துக்கும், தாங்களே மின்சாரம் உற்பத்தி செய்து விநியோகிப்போருக்கும் நிச்சயம் கட்டணத்தில் வித்தியாசம் இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து தன்னிறைவு பெறும் அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யவில்லை. குளிர்காலத்தில் அதிகளவில் மின்சாரத்தை வெளியிலிருந்து சுவிட்சர்லாந்து இறக்குமதி செய்கிறது.
மேலும், மின்சார கார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வீடுகளை வெப்பப்படுத்துவதற்காகவும் மின்சாரத் தேவை அதிகரிக்க, சுவிட்சர்லாந்து உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கும், அதன் தேவைக்கும் இடையிலான இடைவெளி பெரிதாகிக்கொண்டே செல்கிறது.
2023ம் ஆண்டில் சுவிஸ் மக்கள் மின்சாரத்துக்கு மிகவும் அதிக கட்டணம் செலுத்தவேண்டிய நிலை உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.