சுவிட்சர்லாந்தில் கோவிட் நோயின் புதிய அலை
சுவிட்சர்லாந்தில் கடந்த சில வாரங்களாக மூச்சுத் தொற்றுடன் தொடர்புடைய மருத்துவ சந்திப்புகள் அதிகமாக உள்ளன. அதில் கோவிட் நோய் முக்கிய காரணியாக உள்ளது.
ஃபெடரல் பொப்ளிக் ஹெல்த் அலுவலகத்தின் (FOPH) தகவலின் படி, தற்போது 100,000 பேருக்கு 101 பேர் மருத்துவ ஆலோசனை எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 69 பேர், 2024 ஆம் ஆண்டில் 59 பேர் மட்டுமே இருந்தனர். இது கோவிட் தற்போது அதிகரித்து வருகிறது என்பதை காட்டுகிறது.

தொற்று நோயியல் நிபுணர் கிறிஸ்டோஃப் பிளக்ஸ் கூறியதாவது, “கடந்த சில வாரங்களில் கோவிட் நோய் அதிகமாக காணப்படுகிறது. வைரஸ் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது” என்பது.
அதனால் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவசியமில்லாத பயணங்களை குறைக்கவும், கூட்ட இடங்களில் இருப்பதைத் தவிர்க்கவும், கைகள் மற்றும் முகத்தை சுத்தமாக வைத்திருக்கும் பழக்கத்தை தொடரவும் பரிந்துரைக்கப்படுகின்றது.
இது போன்ற புதிய அலைகள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள முக்கியம் என மருத்துவ அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.