பிலிப்பைன்ஸில் சுவிஸ் பெண் கைது – 6 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
பிலிப்பைன்ஸின் மணிலா சர்வதேச விமான நிலையத்தில், 6 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் (Methamphetamine) எடுத்துச்செல்ல முயன்றதாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் கருப்புச் சந்தை மதிப்பு அரைக் கோடி சுவிஸ் பிராங்க் (CHF 500,000) க்கும் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் அபூதாபி வழியாக மணிலாவுக்கு பயணம் செய்தபோது, வழக்கமான எக்ஸ்-ரே பைகள் சோதனையில் சந்தேகத்துக்குள்ளாகினார். தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான சோதனையில், அவரது பயணப்பையில் நான்கு பிளாஸ்டிக் பைகளில் சந்தேகத்திற்குரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருள் நாய் மற்றும் ஸ்பெக்ட்ரோமீட்டர் சோதனை மூலம் அது மெத்தாம்பெட்டமைன் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

கடுமையான தண்டனை சாத்தியம்
பிலிப்பைன்ஸ் சட்டப்படி, 10 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தால், 20 முதல் 40 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். கூடுதலாக, 7,700 முதல் 154,000 பிராங்க் (CHF) வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.
இந்த சுவிஸ் பெண், இத்தகைய சட்டங்களின் கீழ் நீண்டகால சிறைத் தண்டனையும், கடுமையான சிறைச்சாலைக் கொள்கைகளையும் எதிர்கொள்ள நேரிடலாம் என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
© KeystoneSDA