எச்சரிக்கை : Coop நிறுவனத்தின் 900ml சாக்லேட் ஐஸ்கிரீமுக்கு ஏற்பட்ட சிக்கல்
பிரபல சில்லறை விற்பனை நிறுவனம் (கோப்) Coop, தனது (றாம்) Rahmglace Schokolade 900ml ஐஸ்கிரீம் பொருளை சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதற்கான காரணம், தயாரிப்பில் வெளிப்படையாக குறிப்பிடப்படாத அலர்ஜி உண்டாக்கும் பொருள் (ஹேஸல்நட் – Haselnuss) கண்டறியப்பட்டிருப்பதே ஆகும்.
யாருக்கு அபாயம்?
ஹசேல்னுஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கு, இந்த தயாரிப்பை சாப்பிடுவது சுகாதாரத்திற்கு ஆபத்தாக இருக்கலாம் என Coop எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, அந்தக் குழுவினர் இந்த தயாரிப்பை உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஆனால், ஹசேல்னுஸ்க்கு அலர்ஜி இல்லாதவர்களுக்கு எந்தத் தீங்கும் இல்லை, அவர்கள் இந்த ஐஸ்கிரீமை சாப்பிடலாம்.

எந்த தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன?
இந்த அறிவிப்பு ஒரு குறிப்பிட்ட தயாரிப்புக்கு மட்டுமே பொருந்தும்:
- Coop Rahmglace Schokolade 900ml
- Mindesthaltbarkeitsdatum (காலாவதி தேதி): 15.02.2027
- Artikel-Nummer (பொருள் எண்): 4.920.212
- EAN-Code: 7613331211774
- விற்பனை விலை: CHF 8.95
👉 மற்ற தேதியிலான தயாரிப்புகள் பாதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்போது, எங்கு விற்பனை செய்யப்பட்டது?
பாதிக்கப்பட்ட இந்த ஐஸ்கிரீம் தயாரிப்புகள் 26 ஆகஸ்ட் 2025 முதல் 11 செப்டம்பர் 2025 வரை விற்பனைக்கு கிடைத்தன. அவை:
- Coop சுப்பர் மார்க்கெட்டுகள்
- Coop City டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள்
- Coop.ch ஆன்லைன் பிளாட்ஃபார்ம் என்பவற்றில் விற்பனைக்கு உள்ளது. தற்போது, பாதிக்கப்பட்ட அனைத்து தயாரிப்புகளும் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஏற்கனவே இந்த தயாரிப்பை வாங்கிய வாடிக்கையாளர்கள், அதை அருகிலுள்ள Coop விற்பனை நிலையங்களுக்கு திருப்பித் தரலாம். முழு விலையும் (CHF 8.95) திருப்பித் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
© Coop