சர்வதேச அளவில் சர்ச்சையில் சிக்கிய சுவிஸ் தற்கொலை மையம்
58 வயதான மௌரீன் ஸ்லோ என்ற இங்கிலாந்து பெண், குடும்பத்திடம் ‘லிதுவேனியாவுக்கு பயணம் செல்கிறேன்’ எனக் கூறி, உண்மையில் சுவிட்சர்லாந்தின் சொலுத்தூர்ன் கன்டோனிலுள்ள நுனிங்கென் நகரில் பெகசோஸ் அமைப்பின் மூலம் தற்கொலை செய்துகொண்டார். இரண்டு நாட்கள் கழித்து, மகள் மேகனுக்கு, தாயின் சாம்பல் நிரம்பிய அஞ்சல் பெட்டி மற்றும் தகனம் சான்றிதழ் வந்தது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பிரிட்டிஷ் ஊடகங்களில் விவாதமாகியுள்ளது. குடும்பம், தாயின் மனநிலை சரியில்லாதபோது உதவி தற்கொலை அனுமதித்ததாக பெகசோஸை குற்றம் சாட்டுகிறது. ஆனால், அமைப்பு, அவர் சுயாதீன மனநல பரிசோதனையில் தெளிவாக இருந்தார் என விளக்குகிறது.

நுனிங்கெனில் உள்ளூர் மக்கள் கூட இந்த அமைப்பை எதிர்த்து வருகின்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் ஒன்றை வாங்கி, அதனை ‘விருந்தினர் இல்லம்’ என்ற பெயரில் தற்கொலை மையமாக மாற்றியிருப்பது ஏமாற்றம் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை கிராமத்திலிருந்து விலக்கி மாற்ற வேண்டும் என மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விமர்சனங்களைத் தொடர்ந்து, பெகசோஸ் இனி கடுமையான விதிமுறைகளை பின்பற்றுவதாகவும், நோயாளிகளின் குடும்ப உறவுகள் தொடர்பான தகவல்கள் நேரடியாகச் சரிபார்க்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.”
© Britis Media