சுவிட்சர்லாந்தில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்ய வேண்டும் – “Green Party” கட்சி கோரிக்கை
சுவிட்சர்லாந்து பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிரான போராட்டத்தில் முன்னோடியான பங்கு வகிக்க வேண்டும் என “Green Party” வலியுறுத்தியுள்ளது. அதற்கான முதல் படியாக, கோப் (Coop) மற்றும் மிக்ரோஸ் (Migros) போன்ற பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் 5 centபிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஆனால் இந்த யோசனைக்கு அனைவரும் ஒப்புதல் தெரிவிக்கவில்லை. சூழல் குழுவின் தலைவர் மற்றும் எம்.பி. கிரிஸ்டியன் இமார்க் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“இது இன்னொரு அவசியமற்ற மற்றும் சித்தாந்த அடிப்படையிலான தடை மட்டுமே. இந்த பைகளில் பிரச்சனை இல்லை. நாங்கள் அவற்றை மளிகை பொருட்களை வீட்டிற்கு கொண்டு செல்ல பயன்படுத்துகிறோம்; பின்னர் மீண்டும் பல வேலைகளுக்குப் பயன்படுத்தி, சரியான முறையில் கைவிடுகிறோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
ஆனால், தடை சட்ட முன்மொழிவை முன்னெடுத்த “Green Party” கட்சியின் மாரியோனா ஷ்லாட்டர் வேறுவிதமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
“சுலபத்திற்காக சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடாது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகள் அதே அளவு வசதியானவை, மேலும் தேவையற்ற பிளாஸ்டிக் கழிவைத் தடுக்கின்றன,” என அவர் விளக்கினார்.
சுவிட்சர்லாந்து மக்கள் மத்தியில் இந்த விவாதம் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பரபரப்பை மீண்டும் எழுப்பியுள்ளது.
@KeystoneSDA