சுவிஸில் நிறுத்தப்பட்டிருந்த பிரிபூர்க் – பெர்ன் ரயில் பாதை மீண்டும் ஆரம்பம்
கடந்த ஜூன் 27ஆம் தேதி முதல் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த பிரிபூர்க் – பெர்ன் ரயில் பாதை (Fribourg–Bern line) மீண்டும் இயக்கத்தில் வந்துள்ளது. ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு பேசும் சுவிஸ் பகுதிகளை நேரடியாக இணைக்கும் இந்த பாதை, நாட்டின் முக்கியமான ரயில் சேவைகளில் ஒன்றாகும்.
முக்கிய ரயில்கள் மீண்டும் பணி தொடக்கம்
இந்த பாதை திங்கள்கிழமை முதல் வழக்கமான முறையில் செயல்படத் தொடங்கியதால், இதன் காரணமாக முன்பு ரத்து செய்யப்பட்டிருந்த பல முக்கிய ரயில்களும் மீண்டும் பயணிகளை ஏற்றத் தொடங்கியுள்ளன:
- IC1 – ஜெனீவா விமான நிலையம் முதல் சென்ட்கேலன் வரை
- IR15 – ஜெனீவா விமான நிலையம் முதல் லுசேர்ன் வரை
- RE3 – பிரிபூர்க் முதல் டூடிங்கன் வரை
- S2 – லௌபென் முதல் பெர்ன் யூரோபாப்ளாட்ஸ் (Bern Europaplatz) வரை புதிய ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பயணிகளுக்கு சுலபம்
கடந்த இரண்டு மாதங்களாக மாற்றுப் போக்குவரத்து மற்றும் தாமதங்களால் சிரமங்களை சந்தித்த பயணிகள் இப்போது மீண்டும் சுலபமாகப் பயணம் செய்ய முடிகிறது. குறிப்பாக பெர்ன் மற்றும் பிரிபூர்க் இடையிலான பயணிகள் நெரிசலை குறைப்பதில் இந்த பாதையின் பங்கு மிக முக்கியமானது.
@KeystoneSDA