ஃப்ரீபுர்க் மாநிலத்தில் பயங்கர தீ விபத்து – 15 உயிர்கள் பரிதாப பலி.!!
ஃப்ரீபுர்க் (Fribourg) மாநிலத்தின் டூடிங்கன் (Düdingen) பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஒரு பண்ணையில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. மாநிலக் காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, தீ காலை 7.00 மணியளவில் கட்டிடத்தின் “விவசாயப் பகுதியில்” ஏற்பட்டது.
தீ பரவலைத் தடுக்கும் வீரப்பணிகள்
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து, தீ, பண்ணையின் வசிப்பிட பகுதிகளுக்கு பரவுவதைத் தடுத்து, கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், தீயில் முற்றிலும் சிக்கியிருந்த மாட்டுத்தொட்டியில் (stalla) இருந்து 15 கன்றுகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன.

உரிமையாளர்களின் விரைவான நடவடிக்கை
தீயணைப்பு படையினர் வருவதற்கு முன், பண்ணை உரிமையாளர்கள் தங்களால் முடிந்தவரை சில விலங்குகளை பாதுகாப்பாக வெளியேற்றியதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், திடீர் தீவிபத்தில் உயிரிழந்த கன்றுகளின் எண்ணிக்கை பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
தீ விபத்தின் காரணம் – புலனாய்வு தொடக்கம்
ஃப்ரீபுர்க் மாநிலக் காவல்துறை, சம்பவத்தின் துல்லியமான காரணத்தை ஆராய விசாரணையை ஆரம்பித்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி, தீ மாட்டுத்தீவனத்தின் (foraggio) நொதித்தல் (fermentation) காரணமாக தானாகவே உருவாகியிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த சம்பவம், விவசாயப் பண்ணைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
@Kapo FR