வாட் மாகாணத்தில் ராட்சத பாம்பை பார்த்து அலறிய பெண்.!!
ஒரு வாரத்திற்கு முன்பு இரவு நடைப்பயணம் முடித்து கணவருடன் வீடு திரும்பியபோது, வாட் மாகாணத்தில், வில்லெனூவ் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனது இல்லம் அருகில் Python பாம்பை கண்டதாக தெரிவித்துள்ளார்.
வீட்டின் முன்பாக பாம்பு
பெண் வீட்டிற்குள் நுழையும்போது, குடியிருப்பு கட்டிட நுழைவாயில் படிக்கட்டின் முன்பாக குறித்த பாம்பு சுருண்டிருந்தது. இன்று சுவிஸ் இணையதளம் ஒன்று வெளியிட்ட இந்தச் செய்தியை, Haut-Lac தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை (SDIS) தளபதி, மேஜர் யிவ்ஸ் டுபுய்ஸ் உறுதிப்படுத்தினார்.

தீயணைப்பு படையினர் உடனடி நடவடிக்கை
சம்பவத்தின் போது அச்சமடைந்த பெண் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். விரைவில் வந்த தீயணைப்பு படையினர் பாம்பை பாதுகாப்பாக பிடித்து அகற்றினர். தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையினர் இவ்வகை உயிரின மீட்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சி பெற்றவர்கள். எனினும், பைதானை (Python) கையாளுதல் இவர்களுக்கு இதுவே முதல் அனுபவம்.
பாம்பை முதலில் கண்ட அந்தப் பெண் கூறுகையில்:
“வீட்டு வாசல் அருகில் மஞ்சள் நிறத்தில் பிரகாசமாக இருந்த ஒன்றை பார்த்தேன். அது பிளாஸ்டிக் பாம்பு பொம்மை என்று நினைத்தேன். ஆனால், நான் அருகே சென்றபோது அது நகரத்தொடங்கியது. பின்னரே அது உண்மையான பாம்பு என்பதை உணர்;ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
அந்த பைதான் எங்கு இருந்து வந்தது, யாருடையது என்பது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
@20min